tamilkurinji logo


 

Gold ETF திட்டம் 230 கோடி டாலர் முதலீடு விலக்கப்பட்டது,




Gold ETF திட்டம் 230 கோடி டாலர் முதலீடு விலக்கப்பட்டது

First Published : Sunday , 15th July 2012 09:19:38 PM
Last Updated : Sunday , 15th July 2012 09:19:38 PM


Gold ETF திட்டம் 230 கோடி டாலர் முதலீடு விலக்கப்பட்டது,

ஜுன் மாதத்தில் கோல்டுஈ.டி.எப். எனப்படும் தங்க பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து 230 கோடி டாலர் அளவிற்கு முதலீடு விலக்கப்பட்டுள்ளது. இப்பிரிவில் இந்த அளவு தொகை வெளியேறியது இதுவே முதல் முறை என இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஓராண்டு காலத்தில் தங்கம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி செயல்பட்டனர். இதன் காரணமாகவே கோல்டு ஈ.டி.எஃப். முதலீடு கணிசமாக வெளியேறியுள்ளதாக தெரிகிறது.

பரஸ்பர நிதி நிறுவனங்கள் சங்கம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, ஜுன் மாதத்தில் தங்க பரஸ்பர நிதி திட்டங்களின் சொத்து மதிப்பு 2.2 சதவீதம் சரிந்து ரூ.10,100 கோடியாக குறைந்துள்ளது. இதே மாதத்தில் இத்துறை நிறுவனங்கள் நிர்வகிக்கும் மொத்த சொத்து மதிப்பும் 1.5 சதவீதம் குறைந்து ரூ.6.89 லட்சம் கோடியாக சரிவடைந்துள்ளது. ஜுன் மாதத்தின் இடைப்பகுதியில் பல்வேறு நிறுவனங்கள் முதல் தவணை முன்கூட்டிய வரி செலுத்துவதற்காக தமது பரஸ்பர நிதித் திட்ட முதலீடுகளை விலக்கிக் கொள்வது வழக்கம். எனவே இப்போது சொத்து மதிப்பு சரிவடைவது இயற்கையானது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

நிதிச் சந்தையில் முதலீடு செய்வதற்கான பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்த ரூ.25,100 கோடி வெளியேறியுள்ளது. அதே சமயம் பங்கு சார்ந்த பரஸ்பர திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு 5.4 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.1.80 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Gold ETF திட்டம் 230 கோடி டாலர் முதலீடு விலக்கப்பட்டது, Gold ETF திட்டம் 230 கோடி டாலர் முதலீடு விலக்கப்பட்டது, Gold ETF திட்டம் 230 கோடி டாலர் முதலீடு விலக்கப்பட்டது,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு
ரூ. 30 லட்சத்திற்கும் குறைவான வீட்டுக்கடனக்கான வட்டி விகிதத்தை 0. 25% குறைத்து பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. இந்தப் புதிய விகிதமானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பிரதமர் மோடியின் கனவான இந்தியாவில் உள்ள அனைவருக்கும் மிகக் குறைந்த விலையில்

மேலும்...

 ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறை இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமலாக உள்ளது. இந்நிலையில் ஜிஎஸ்டி நெட்வொர்க்கில் பதிவு செய்வதற்கான முறை அடுத்த சில வாரங்களில் தொடங்கும் என்று நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.ஜிஎஸ்டிஎன் எனப்படும் இந்த

மேலும்...

 புதிய உச்சத்தை தொட்டது இந்திய பங்குசந்தை
இந்திய பங்குசந்தை இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. மும்பை பங்குசந்தையில் காலை வர்த்தம் தொடங்கியதும் ‘சென்செக்ஸ்’  107.31 புள்ளிகள் அதிகரித்து 22,162.52 புள்ளிகள் என புதிய உச்சத்தை தொட்டுள்ளது.  தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ‘நிஃப்டி’ 33.05 புள்ளிகள் உயர்ந்து

மேலும்...

 இந்திய பங்குச்சந்தைகளில் 9600 கோடி அன்னிய முதலீடு
தேர்தலுக்கு பிறகு வலுவான ஆட்சி அமையும் என்ற நோக்கில் கடந்த மூன்று மாதங்களாக இந்திய பங்குச்சந்தைகளில் அன்னிய முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.நடப்புக் கணக்கு பற்றாக்குறை கணிசமான அளவு குறைந்து வருவதாலும், ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி தடுக்கப்பட்டு வலுப்பெற்று வருவதாலும் அன்னிய

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in